திட்டமிடல் பிரிவு (Planning Branch)
கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகள் மற்றும் கல்வி நிறுவனங்களின் மனித மற்றும் பௌதீக வளங்கள் தொடர்பான புள்ளிவிபரங்கள் மற்றும் தரவுகளைப் பராமரித்தல். தேவைக்கேற்ப பயன்படுத்துதல், பகிர்ந்தளித்தல், பகுப்பாய்வு செய்தல் போன்றன இத் திட்டமிடல் பிரிவினால் மேற்கொள்ளப்படுகின்றன.
திட்டமிடல் பிரிவில் அனுமதியைப் பெறவேண்டிய ஆவணங்கள்
- வருடாந்த அமுலாக்கல்திட்டம்
- ஐந்தாண்டுத் திட்டம்
- பாடசாலை வரவு செலவுத்திட்டம்
- புதிய கட்டிட நிர்மாணப் பணிகளுக்கான மற்றும் திருத்த வேலைகளுக்கான அனுமதிகள்
- SBLEG நிதிப் பயன்பாட்டிற்கான அனுமதி
- மூலதனப் பொருட் கொள்வனவுகளுக்கான அனுமதி
- குறித்த நிதியாண்டிற்காக அனுமதிக்கப்பட்ட வரவுசெலவுத் திட்டத்தின் பிரதி
- பாடசாலை அபிவிருத்திக் குழுக் கூட்ட அறிக்கை
- பாடசாலை அபிவிருத்திக் கணக்கு மீதி விபரம் (குறித்த காலப்பகுதி வரையான ஒதுக்கீடுகள் மற்றும் பயன்படுத்தப்படாதுள்ள பழைய நிதி ஒதுக்கீடுகள்)
- கொள்வனவுக் குழு, பெறுகைக்குழுத் தீர்மானக் கூட்ட அறிக்கை
திட்டமிடல் பிரிவின் சில பணிகள்
- வலயத்தின் அனைத்து கல்வி நிறுவனங்களினதும் வருடாந்த, இடைக்கால மற்றும் ஐந்தாண்டு திட்டத்தை தயாரித்தல், திட்டமிடல் மற்றும் அமுலாக்குதல் வேலைத்திட்ட வழங்கல்களின் நடைமுறைப்படுத்தல் செயற்பாடுகளின்போது ஆலோசனைவழங்குதலும் திட்டத்தை அங்கீகரித்தலும்.
- பாடசாலைகளின் வருடாந்த வரவு செலவு மதிப்பீட்டை அனுமதித்தல்
- வலயத்தின் அனைத்து கல்வி நிறுவனங்களினதும் பௌதீக, மனிதவளத் தேவைகளை இனங்காணுதல், கணக்கிடுதல் மற்றும் தேவைகளைப் பூர்த்திசெய்ய நடவடிக்கை எடுத்தல்
- வருடாந்த பாடசாலை தொகைமதிப்புச் செயற்பாடுகளை இணைப்புச் செய்தல் தொடர்பாக மேற்பார்வை செய்தலும் முன்னேற்ற அறிக்கை சமர்ப்பித்தலும்.
- சந்தர்ப்பத்திற்கேற்ப வலயக் கல்விப் பணிப்பாளரினால் ஒப்படைக்கப்படும் வேறு பணிகளை மேற்கொள்ளல்.
- வலய உள்ளகக் கட்டமைப்பு தொடர்பாக ஆலோசனைகள், முன்மொழிவுகளை முன்வைத்தல
- கல்வி முகாமைத்துவ தகவல் முறைமை (EMIS) தொடர்பான தரவுகள், தகவல்களைச்சேகரித்தல், அவற்றை தற்காலப்படுத்துதல், ஒழுங்கமைத்தல், பகுப்பாய்வு செய்தல்,மற்றும் பகிர்ந்தளித்தல்.
- பாடசாலை மேம்பாட்டுச் செயற்திட்ட (EPSI) நடவடிக்கைகளை இணைப்புச் செய்தல்
- பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டுள்ள தர உள்ளீடுகளினதும் ஏனைய வழங்கல்களினதும் பயன்பாடு தொடர்பாக ஆலோசனை வழங்குதல்.
பெறுகை தொடர்பான சுற்றுநிருபங்கள்
- 2016/26 இலக்க 2018.06.22ம் திகதிய பாடசாலையை அடிப்படையாகக் கொண்ட பண்புரீதியான, அளவு ரீதியான, கட்டமைப்பு ரீதியாக அபிவிருத்திக்கான திட்டமிடல் சுற்றுநிருபம்
- 19/2019 இலக்க 2019.04.09ம் திகதிய பாடசாலையை அடிப்படையாகக் கொண்ட பண்புரீதியான, அளவு ரீதியான, கட்டமைப்பு ரீதியாக அபிவிருத்தி சுற்றுநிருபம் மற்றும் கைநூல் திருத்தம்