Administration

கல்வி நிருவாகப் பிரிவு

கல்வி வலயத்தின் அதிகாரத்திற்குட்பட்ட சகல பாடசாலைகளினதும் நிருவாகச் செயற்பாடுகள் தொடர்பாக ஆலோசனை வழங்கல், தேவையான வகையில் தலையீடு செய்தல் உள்ளிட்ட ஏராளமான பணிகள் இப்பிரிவினால் மேற்கொள்ளப்படுகிறது

  • Mr.M.C.Nasar

    Mr.M.C.Nasar

    DDE - Administration
    • Mr.

      Mr.

      Administrative Officer
      • Mrs.S.

        Mrs.S.

        CC
        • Mr.CCs

          Mr.CCs

          DO
        • Mr.Sabri

          Mr.Sabri

          DO
        • Ms.J

          Ms.J

          DO
        • Mr.S

          Mr.S

          DO

கல்வி நிருவாகப் பிரிவின் சில பணிகள்

 கல்வி நிருவாகப் பிரிவின் சில பணிகள்

  • பாடசாலைகளில் மாணவர்களை சேர்ப்பது தொடர்பான நடவடிக்கைகளை மேற்பார்வையிடுதல் மற்றும் கண்காணித்தல்.
  • பாடசாலைகளின் கால அட்டவணையை அங்கீகரிக்கவும்.
  • பாடசாலைகளின் ஒழுக்கம் மற்றும் நலன்புரி நடவடிக்கைகள் தொடர்பான விவகாரங்களைச் செய்தல்.
  • வலயக் கல்வி அலுவலகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள ஒழுக்காற்று விடயங்கள் தொடர்பான பணிகள், ஆரம்ப விசாரணைகளை மேற்கொள்வது மற்றும் பரிந்துரைகளை வழங்குதல்.
  • வெவ்வேறு மானியங்கள் மற்றும் உதவித்தொகைகளுக்காக மாணவர்களைத் தேர்ந்தெடுத்து வழிநடத்துதல்.
  • பாடசாலை வளாகங்கள் மற்றும் வளங்களைப் பயன்படுத்துவதற்கு வெளி தரப்பினருக்கு அனுமதி வழங்குதல்.
  • பாடசாலை அபிவிருத்தி சங்கங்கள் மற்றும் பழைய மாணவர் சங்கங்களின் விவகாரங்கள் மற்றும் செயல்பாடுகளின் ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு.
  • கல்வி சுற்றலாக்கள் மற்றும் களப் பயணங்களுக்கு அனுமதி வழங்கவும்.
  • பாடசாலை சீருடைகள் மற்றும் பாடப் புத்தகங்கள், ஆசிரியர் பயிற்றுவிப்பு கையேடுகள், நூலக புத்தகங்கள், கற்றல் உபகரணங்கள், மாணவர் பருவ டிக்கெட்டுகள் வழங்குவது தொடர்பான விவகாரங்கள்.
  • தரம் 5 புலமைப்பரிசில் வழங்குவது தொடர்பான நடவடிக்கைகள்.
  • வலயப் பாடசாலைகளில் ஆசிரியர் பயன்பாடு, வலயங்களுக்கிடையிலான ஆசிரியர் இடமாற்றத்தின் போது மாகாணக் கல்விப் பணிப்பாளருக்கு சிபாரிசுகளை முன்வைத்தல்.
  • ஆசிரியர் இடமாற்ற சபையைக் கூட்டுதல், கூட்டம் நடத்துதல், சிபாரிசுகளை செய்தல்.
  • அதிபர் சேவையின் சகல உத்தியோகத்தர்களினதும். இடமாற்றம் தொடர்பான சிபாரிசுகளை முன்வைத்தல்.
  • வலயக் கல்விப் பணிமனை மற்றும் ஏனைய கல்வி நிறுவனங்களின் அலுவலர்கள் மற்றும் பணிக்குழுவினரது கடமைப் பட்டியலைத் தயாரித்தலும் கண்காணித்தலும்.
  • அதிபர், ஆசிரியர்கள் மற்றும் பணிக்குழுவினரின் தனிப்பட்ட கோவைகளை பேணுதல் (சம்பளஏற்றம், வெளிநாட்டு விடுமுறை, சேவை நீடிப்பு, ஓய்வூதியக் கோவை, கடன் அனுமதித்தல், பதவி உயர்வுக்கான சிபாரிசு, கடமை லீவு, பிரசவ லீவு, மற்றும் விசேட சுகயீன லீவு அனுமதித்தல் மற்றும் வருடாந்த சம்பள உயர்வைப் பெற்றுக் கொடுத்தல், சேவையில் நிரந்தரமாக்கல். இடமாற்றம் செய்தல் ஒழுக்காற்று நடவடிக்கைகள்.
  • பணிக்குழுவினர் கொடுப்பனவு, மேலதிக நேரக் கொடுப்பனவு, நாளாந்த வேதனம், விடுமுறைதினக் கொடுப்பனவு, சகல கொடுப்பனவுப் பட்டியல்களையும் தீர்த்தல், இலவச புகையிரத ஆணைச்சீட்டு வழங்குதல் ஆகியவற்றுக்கான நிதி வழங்கல்.
  • முற்பணம், கடன், அக்ரஹார காப்புறுதி என்பனவற்றுக்கான சிபாரிசுஃஅனுமதியைப் பெற்றுக் கொடுக்கும் செயற்பாடுகள்.
  • கல்வி வலயத்தினுள் பணியாற்றும் சகல கல்வி சாரா ஊழியர்களினதும் இடமாற்றம், வலயத்திலிருந்து விடுவித்தல் தொடர்பான நடவடிக்கைகள்.

ஆசிரியர்களுக்கானது

ஆசிரியர்களால் நிருவாக்க கிளைக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆவணங்கள்
புதிதாக கடமையேற்கும் ஆசிரியர் தனது சுயவிபரக்கோவையை உருவாக்க சமர்ப்பிக்கும் ஆவணங்கள்

சமர்பிக்கப்பட வேண்டிய ஆவணங்கள் புதிய ஆசிரியர்களுக்கான சுய விபரக்கோவை ஆரம்பித்தல்.

1. நியமனக் கடிதம்

2. கடமையேற்ற கடிதம் (அதிபரால் சிபாரசு செய்யப்பட்டு)

3. பிறப்புச் சான்றிதழ்  (மூலப்பிரதி)

4. உறுதிப்படுத்தப்பட்ட தேசிய அடையாள அட்டை

5. குடியியல் நிலையையும்இ வாழும் நிலைமைகளையும் வெளிப்படுத்தல் (ப.பொது 176)

6. சத்தியப் பிரமாணம் (ப.பொது 278)

7. உடன்படிக்கை (Agreement)--ப.பொது 160 8. சொத்துக்களையும் பொறுப்புக்களையும் வெளிப்படுத்தல்  (ப.அபாது 261)

9. விதவைகள் அநாதைகள் ஓய்வூதியத் திட்டம் (W&OP)

10. பரீட்சைப் பெறுபேறுகள்

11. க.பொ.த(சாதாரணம்), உயர்தரம்.

12. பட்ட/டிப்ளோமா/HNDE சான்றிதழ்

13. மருத்துவப் பரிசோதனை அறிக்கை –பொது -169, Heath-169

14. வரலாற்றுத்தாள் -பொது- 53

15. அக்ரஹாரா காப்புறுதி விண்ணப்பம்

16. திருமணச் சான்றிதழ்(சட்டத்திருமணம்)

17. கணவரின் பிறப்புச் சான்றிதழ்

18. கணவரின் தேசிய அடையாள அட்டைப் பிரதி

19. பிள்ளைகளின் பிறப்புச் சான்றிதழ்.

Some Important Forms for Download

Here are some imporatnt forms which is related to this category
Image
  • (W& OP) விதவைகள் அனாதைகள் உபகார இலக்கம்
(W& OP) விதவைகள் அனாதைகள் உபகார இலக்கம்தாங்கள் இதுவரை விதவைகள் அனாதைகள் உபகார இலக்கம் பெறுவதற்கான விண்ணப்பத்தைச் சமர்ப்பித்து அதற்கான இலக்கத்தினைப் பெறவில்லை இதனால் தாங்கள் எதிர்காலத்தில் (W& OP) இலக்கமில்லாது பல சிரமத்தை எதிர்கொள்ள வேண்டி ஏற்படும்.
எனவே மேலும் தாமதியாது இத்துடன் இனைக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பூரணப்படுத்தி பின்வரும் ஆவணங்களையும் இக்கடிதம் கிடைத்து 07 தினங்களுக்குள் தங்கள் சுயவிபரக் கோவைக்குப் பொறுப்பான முகாமைத்துவ உதவியாளரிடம் சமர்ப்பிக்கவும்.
1. தங்கள் முதல் நிரந்தர நியமனக்கடிதத்தின் மூலப்பிரதியையும் அதிபரால் உறுதிப்படுத்தப்பட்ட தங்கள் தேசிய அடையாள அட்டைப் பிரதியையூம் 1MB  க்கு மேற்படாது CD இல் பதிவு செய்து சமர்ப்பித்தல்.
2. தங்கள் பிறப்பு அத்தாட்சிப்பத்திரம் பிரதி - 01
3. தேசிய அடையாள அட்டைப்பிரதி - 01
4. திருமணச் சான்றிதழ் பிரதி - 01
5. கணவன் / மனைவி பிறப்பு அத்தாட்சிப் பத்திரம் பிரதி - 0
16. கணவன் / மனைவி தேசிய அடையாள அட்டைப் பிரதி - 01
7. பிள்ளைகளின் பிறப்பு அத்தாட்சிப்பத்திரங்கள் ஒவ்வொன்று.
8. பெயர்களில் வித்தியாசமிருப்பின் சத்தியக் கடதாசி

  • ஓய்வூதியம் பெறுவதற்கான அனுமதி கோரல்
அரச ஊழியர் ஒருவர் ஓய்வூதியம் பெறுவதற்காக பின்வரும் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்
  1. கோரிக்கைக் கடிதம்
  2. தனது சேவையிலிருந்து ஒய்வு பெறும் விண்ணப்பம் PD 03 (I.II)
  3. பிறப்புச் சான்றிதழ் - மூலப்பிரதி
  4. தேசிய அடையாள அட்டை நிழற்பிரதி – உறுதிப்படுத்தப்பட்டது.
  5. முதல் நியமனக் கடிதம் - பிரதி
  6. கடமையேற்றல்
  7. பதவியில் உறுதிப்படுத்தல் - பிரதி
  8. 2016.12.22ற்கு முன் நியமனம் பெற்றிருப்பின் கிழக்கு மாகாண சேவைக்கு உள்ளீர்ப்பு செய்யப்பட்ட கடிதம் (மாகாணப் பாடசாலை மாத்திரம்)
  9. பெயர் மாற்றக் கடிதம்
  10. பெயர் வித்தியாசத்திற்கான சத்தியக் கடதாசி
  11. 5 வருட லீவு விபரம்
  12. சேவைச் சான்றிதழ்
  13. Colour Photo – 3 1/4 X 4 1/4  (கணவன் மற்றும் மனைவி)
        ஒவ்வொன்றும் இரண்டு பிரதிகளில் சமர்ப்பிக்க வேண்டும்


  • ஓய்வூதிய மாற்றிய பணிக்கொடைஃமாதாந்த ஓய்வூதிய விண்ணப்பம்
தேவையான ஆவணங்கள்
  1. PD 03 படிவம்                                     -03
  2. ஓய்வுபெறுவதற்கான அனுமதிக் கடிதத்தின் பிரதி                - 03        
  3. பிறப்புச் சான்றிதழ் மூலப்பிரதி                             – 03
  4. தேசிய அடையாள அட்டைப் பிரதி                         -03
  5. திருமணச் சான்றிதழ் மூலப்பிரதி                             – 03
  6. கணவன்/மனைவியின் பிறப்புச் சான்றிதழ்மூலப்பிரதி                – 03
  7. கணவன்/மனைவியின் தேசிய அடையாள அட்டைப் பிரதி            -03
  8. சத்தியக் கடதாசி (03/2015)                            -03
  9. வதிவிடச் சான்றிதழ்                                 -03
  10. வங்கிக் கணக்குப் புத்தகப் பிரதி                         – 03
  11. பெயர்மாற்றக் கடிதப் பிரதி                             - 03
  12. சத்தியக் கடதாசி (பெயரில் வித்தியாசம்)                     -03
  13. பிள்ளைகளின் பிறப்புச் சான்றிதழ் (26 வயதிற்குற்பட்ட)            -03
  14. புகைப்படப் பிரதி (3.5cm×4.5cm) (கணவன் /மனைவி)            

  • மரணப்பணிக்கொடை / மாதாந்த ஓய்வூதிய விண்ணப்பம்
தேவையான ஆவணங்கள்
  1. PD 05படிவம்                                                -03
  2. PD 04படிவம்                                                -03
  3. மரணச் சான்றிதழ்                                            -03
  4. விவாகச் சான்றிதழ்                                            -03
  5. 26 வயதிலும் குறைந்த பிள்ளைகளின் பிறப்புச் சான்றிதழ்            -03
  6. விதவைகள் தபுதாரர் அநாதைகள் ஓய்வூதிய இலக்கப் பிரதி        -03
  7. கணவன்/மனைவியின் தேசிய அடையாள அட்டைப் பிரதி         -03
  8. வங்கிக் கணக்குப் புத்தகப் பிரதி                                -03 
  9. உரித்து தொடர்பிலான பிரதேச செயலாளரின் பரிந்துரை அறிக்கை    -03
  10. பிள்ளைகளின் வங்கிக் கணக்குப் புத்தகப் பிரதி                    -03 
  11. மரணித்த ஆசிரியரின் பிறப்புச் சான்றிதழ்                        -03
  12. மனைவியின் பிறப்புச் சான்றிதழ்                                -03
  13. பெயர் வித்தியாசத்திற்கான சத்தியக் கடதாசி                    -03




Login

Now Kinniya Zone Schools can login to our website and maintain your school contents

Calendar

No event in the calendar
Mon Tue Wed Thu Fri Sat Sun
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30

Get In Touch

  • Address: Main Street, Kinniya
  • General:  026-2236155
  • Fax: 026-2236155
  • General: 026-2236155
  • ZDE: 026-2236256
  • Planning Unit: 026-2236154
  • Account Branch: 026-2236280
  • E-mail: kin@edudept.ep.gov.lk