நிதிக்கிளை (Accounts Branch)
வலயக் கல்விப் பணிமனை ஒன்றினால் மேற்கொள்ளப்படும் அனைத்து வகை சேவைகளும் முறையாக இடம்பெறுவதற்குத் தேவையான நிதி முகாமைத்துவம் செய்வது இந்தப் பிரிவின் முக்கிய பணியாகும்
நிதிப் பிரிவின் சில பணிகள்
- வருடாந்த நிதிச் செலவு மதிப்பீடு தயாரித்தலும் நிதி ஒதுக்கீட்டை பெற்றுக் கொள்ளுதலும்.
- கல்வி மற்றும் கல்வி சாரா ஊழியர்களின் வேதனங்களை வழங்குதல்.
- மேலதிக நேரக் கொடுப்பனவு, பிரயாணச் செலவு மற்றும் இதர செலவுகள் வழங்கல்
- தனியார் பாடசாலை மற்றும் பிரிவேனாகளுக்கு நன்கொடைகளைப் பெற்றுக் கொடுத்தல்.
- பல்வேறு வேலைத்திட்டங்கள், செயலமர்வுகளுக்கான கொடுப்பனவுகளை
- மேற்கொள்ளல்.
- கணக்குகளை பராமரித்தல், கட்டுப்படுத்துதல், கண்காணித்தல்.
- நிதி வள முகாமைத்துவமும் கட்டுப்பாடும்.
- புலமைப் பரிசில்கள் வழங்கலும் அது தொடர்பான செயற்பாடுகளும்.
- நீர், மின்சாரம், வரிகள் மற்றும் தொலைப்பேசி கட்டணங்களைச் செலுத்துதல்.
- நிதிப்பிரமாணம் 104(3) ற்கு ஏற்ப பொருட்களின் அழிவு மற்றும் இழப்புகள் தொடர்பாக செயற்படுதல். ஆரம்ப விசாரணைகளை மேற்கொள்ளலும் அவ் இழப்பு அனைத்தையும் பதிவளித்தல் கணக்கின் மூலம் அறிக்கைப்படுத்துலும்.
- கொள்வனவு செயற்பாடுகள் தொடர்பான நடவடிக்கைகளை முன்னெடுத்தல்.
- பாடசாலைகளில் பொருட்கணக்கெடுப்பை நடத்துதல். பொருளிருப்பை சமப்படுத்துதல், பொருட் பதிவேட்டிலிருந்து நீக்குவதற்கான சிபாரிசுகளை வழங்கல்.
- பாடசாலைக் கட்டிட நிர்மாணம், திருத்தங்களுக்கான கொடுப்பனவுகளை செய்தல்.
- சகல கொடுப்பனவுகளும் தொடர்பாக நிதிமுன்னேற்ற அறிக்கை சமர்ப்பித்தல்.
- ஊழியர்களின் முற்பணம் மற்றும் கடன்களை முறையாக வழங்குதல், ஒப்பிடுதல், கட்டுப்பாட்டுக் கணக்கை பராமரித்தல் என்பவற்றை மேற்கொள்ளல்.
- வருட இறுதி கணக்குகளை தயாரித்தலும் கொடுப்பனவுகளை தீர்த்தலும்.
- பொது வைப்புக் கணக்கை ஒப்பிடுதலும் கட்டுப்பாட்டுக் கணக்கை பராமரித்தலும்.
- பாடசாலை மற்றும் கல்வி நிறுவனங்களின் நடைமுறைக் கணக்கு அறிக்கைகளைப் பெற்றுக் கொள்ளலும், மேற்பார்வையும்.
- அலுவலகத்திலும் பாடசாலைகளிலும் நிதி ஒழுக்காற்றொன்றையும், வெளிப்படைத் தன்மையையும் பேணுவதும் கணக்கீட்டு குறைபாடுகளை இழிவுபடுத்திக் கொள்ளத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளலும்.
- ஓய்வூதிய மானியத்தைப் பெற்றுக் கொடுத்தல்;.
- வங்கிக் கணக்கை பராமரித்தல் தொடர்பான செயற்பாடுகளும், மாதாந்த வங்கிக் கணக்கு இணக்கக்கூற்றைத் தயாரித்தலும்.
- களஞ்சியப்படுத்தல் சரக்கிருப்புக் கட்டுப்பாடு தொடர்பான செயற்பாடுகள்.
- வள முகாமைத்துவம் தொடர்பான முறைகேடுகள், ஊழல்களை வலயக் கல்விப் பணிப்பாளருக்கு அறிவித்தலும் அதுபற்றிய ஒழுக்காற்று நடவடிக்கைகளை தொடங்குதலும்.
- நிதிப்பிரிவுடன் தொடர்புடைய செயற்பாடுகளை உள்ளக மதிப்பீட்டுக்கு உட்படுத்துதல்.
- சந்தர்ப்பத்;திற்கேற்ப வலயக் கல்விப் பணிப்பாளரினால் ஒப்படைக்கப்படுகின்ற வேறும் கடமைகள் தொடர்பான செயற்பாடுகள்.
படிவங்கள் (Forms for Download)
Size:
77.24 KB
Size:
44.11 KB
Size:
55.95 KB
Size:
42.73 KB
Size:
54.05 KB
Size:
45.94 KB
Size:
68.97 KB
Size:
69.25 KB
Size:
2.44 MB