அபிவிருத்திப் பிரிவு (Development Branch)
வலயத்திற்குள் கல்வித்தரத்தை பண்புசார் ரீதியாக பேணுவதன் பிரதான பணிகள் இந்தக் கல்வி அபிவிருத்திப் பிரிவுக்குரியதாகும்
கல்வி அபிவிருத்திப் பிரிவின் சில பணிகள்
- கல்விக்கொள்கைகள் மற்றும் கலைத்திட்டம் என்பன முறையாக அமுலாக்கப்படுதல் தொடர்பாக பொறுப்பேற்றலும் வகைகூறலும்.
- கல்வித் துறைசார் அபிவிருத்தி வேலைத்திட்ட பிரவேச சட்டகத்தின் அடிப்படையிலான வேலைத்திட்டங்களுக்காக வருடாந்த, இடைக்கால, ஐந்தாண்டுத் திட்டம் தயாரித்தலும் பிரேரணைகளை முன்வைத்தலும்
- அனுமதிக்கப்பட்ட திட்டங்களை நடைமுறைப்படுத்துதல், முன்னேற்ற மீளாய்வு மற்றும் கண்காணித்தல்.
- பாடசாலைகளில் இணைப்பாடவிதான, பாட இணைச் செயற்பாடுகளை ஒழுங்குசெய்வதற்கான வழிகாட்டலும் ஆலோசனை வழங்கலும்.
- கலைத்திட்ட நவீனமயமாக்கல்களை அறிமுகப்படுத்துதலும் அமுலாக்குதலும்.
- பாடப் பணிப்பாளர்கள், ஆசிரிய ஆலோசகர்கள் மற்றும் செயற்றிட்ட உத்தியோகத்தர்களின் செயலாற்றுகை முன்னேற்ற மீளாய்வு.
- பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டுள்ள செயற்றிட்ட உதவிகள், தர உள்ளீடுகள் தொடர்பாக கண்காணித்து முன்னேற்றம் தொடர்பான தகவல்களைப் பெற்றுக்கொள்ளல்.
- சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு பாட அபிவிருத்தி வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துதல்.
- மாணவர் அடைவு மட்ட விருத்திக்கான வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துதல்.
- மாணவர் அடைவு மட்டத்தை பகுப்பாய்வு செய்து, அதனால் வெளிப்படுத்தப்படும் தகவல்களின் அடிப்படையில்; கல்வியின் பண்புத்தர மேம்பாட்டுக்காக நடவடிக்ககை எடுத்தல்.
- ஆசிரியர் மற்றும் பணிக்குழுவினரின் கொள்ளாற்றல் விருத்திக்காக செயற்பாடுகளை ஒழுங்கமைத்தலும் நடைமுறைப்படுத்துதலும்.
- கோட்டக் கல்விப் பணிமனை மற்றும் கல்வி நிறுவனங்களின் கல்வி அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு ஆலோசனை வழங்குதல், மதிப்பீடு செய்தல் மற்றும் கண்காணித்தல்.
- வலய மட்டத்தில் பாட ரீதியான போட்டிகளை ஏற்பாடு செய்தலும் நடாத்துதலும்.
பாடசாலைகளில் வெளிவாரி மதிப்பீட்டு வேலைத்திட்டங்களை அமுலாக்கல், தரச்சுட்டிகளைத் தயாரித்தலும் அபிவிருத்தித் தேவைகளை இனங்கண்டு அதற்கிணங்க செயற்படுதலும். - பாடசாலைகளின் உள்ளக மதிப்பீட்டு வேலைத்திட்டங்களை கண்காணித்தலும் தேவையான வழிகாட்டல்களை வழங்கலும்.
- கல்வி அபிவிருத்திப் பிரிவை உள்ளக மதிப்பீட்டுக்கு உட்படுத்தலும் அறிக்கைப்படுத்துதலும் பின்னூட்டல் வழங்குதலும