கல்வி முகாமைத்துவம் (Management Branch)
தேசிய கல்வி கொள்கைக்கேற்ப பாடசாலையில் கல்வி கற்பவர்களினதும் பாடசாலை அமைந்துள்ள பிரதேச சமூகம் எதிர்பார்க்கும் அபிலாசைகளை நிறைவு செய்யும் வகையில் பண்புசார் கல்வியை பெற்றுகொள்வதற்காக வினைத்திறனான முகாமை செயற்பாடுகள் மூலமாக பாடசாலைகளை பலப்படுத்துதலும் பாடசாலையின் முழுச் சமூகத்தினரையும் உற்பத்தி திறனை அதிகரிக்கும் நோக்கில் பங்களிக்கச் செய்தலும், அதிபர் ஆசிரியர் ஏனைய பௌதீக வளங்களை உச்ச பயனை பெறும் வகையில் வினைத்திறனுடன் செயற்படும் ஆற்றலை விருத்தி செய்வதற்கான செயற்பாடுகளை முன்னெடுப்பதே எமது பிரதான நோக்கமாகும்.
முகாமைத்துவ பிரிவின் சில பணிகள்
- கல்வி முகாமைத்துவ தகவல் முறைமை (EMSI) தொடர்பான தரவுகள், தகவல்களைச் சேகரித்தல், அவற்றை தற்காலப் படுத்துதல், ஒழுங்கமைத்தல், பகுப்பாய்வு செய்தல் மற்றும் பகிர்ந்தளித்தல்.
- வருடாந்த பாடசாலை தொகைமதிப்புச் செயற்பாடுகளை இணைப்புச் செய்தல் தொடர்பாக மேற்பார்வை செய்தலும் முன்னேற்ற அறிக்கை சமர்ப்பித்தலும்.
- பாடசாலை மேம்பாட்டுச் செயற்திட்ட நடவடிக்கைகளை இணைப்புச் செய்தல்.
- பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டுள்ள தர உள்ளீடுகளினதும் ஏனைய வழங்கல்களினதும் பயன்பாடு தொடர்பாக ஆலோசனை வழங்குதல்.
- கல்வி ஆய்வு தொடர்பான விடயங்களை இணைப்புச் செய்தலும், ஆய்வு வெளியீடுகளின் அடிப்படையில் செயற்திட்ட பிரேரணைகளைத் தயாரித்தல்.
- நீர்,மின்சாரம் மற்றும் சுகாதார நலனோம்பல் உள்ளிட்ட பாடசாலை பௌதீகத் தேவைகளை நிவர்த்தி செய்தல்.
- கல்வி அபிவிருத்திச் செயற்பாடுகளுக்காக அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பங்களிப்பினைப் பெற்றுக் கொள்ளலும் வெளிநாட்டு உதவிச் செயற்றிட்டங்களை திட்டமிடல் இணைப்புச் செய்தல், கண்காணித்தல் மற்றும் முன்னேற்ற மீளாய்வும் பிற்சோதனையும்.
- மாவட்ட, பிரதேச அபிவிருத்திக்குழுக்களுக்;குத் தேவையான அறிக்கைகளை தயாரித்தலும், வழங்கலும்.
- நிர்மாணம் மற்றும் பழுதுபார்த்தல் தொடர்பான உரிய தரப்பினருடன் இணைப்பை ஏற்படுத்துதல்
- குறித்த வெளிநாட்டு உதவி வேலைத்திட்டங்களை வழிநடத்துதலும் மேற்பார்வை செய்தலும்.
- அதிபர்களின் கொள்ளாற்றல் விருத்திக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்.
- திட்டமிடல் பிரிவுடன் தொடர்புடைய விடயங்களை உள்ளக மேற்பார்வைக்கு உட்படுத்துதல்.
- சந்தர்ப்பத்;திற்கேற்ப வலயக் கல்விப் பணிப்பாளரினால் ஒப்படைக்கப்படும் வேறும் பணிகளை மேற்கொள்ளல்.