அதிபர்கள் தமது விடுமுறை அனுமதியை வலயக்கல்வி அலுவலகத்தில் பெறல் வேண்டுமெனவும் ஆசிரியர்கள் தமது கடமை விடுமுறை அனுமதியை கோட்டக் கல்வி அலுவலகத்தில் பெறல் வேண்டுமெனவும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 17.09.2022 ஆந் திகதி சனிக்கிழமை எமது நிலையத்தில் மாணவர்கள் தங்களின பல்கலைக்கழக விண்ணப்பத்தை முற்றிலும் இலவசமாக பூர்த்தி செய்து கொள்ளலாம்.
இடம் : பெரியாத்துமுனையில் அமைந்துள்ள ITDLH - Kinniya
Contact Mr.J.Imthiyas - +94 77 529 4442
Provincial level Technology stream students practical camp for Trinco District started at T/Kin/Al-Aqsha College, Kinniya on 27th 09.2022. The students from Trincomalee, Trincomalee north, Kanmtale, Kinniya and Mutur are participating in the practical workshop. The workshop is being held in main two languages (Tamil, Sinhala) for the batterment of the learning community and get a good achievement .
வலய ரீதியான சிறுவர்தின நிகழ்வு.
இன்று கிண்ணியா அல் அஃலா வித்தியாலயத்தில் வலயக் கல்விப் பணிப்பாளரின் தலைமையில் நடைபெற்ற சிறுவர் தின விழாவில் சிறுவர்களுக்கான நிகழ்ச்சிகளாக வகுப்பு ரீதியாக சித்திரப் போட்டிகள், மேடை நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டு போட்டிகளுடன் அதற்கான பரிசளிப்பு நிகழ்வும் நடைபெற்றது.




இன்று (10.10.2022) கிண்ணியா கல்வி வலய ஆலோசனை வழிகாட்டல் பிரிவின் வழிகாட்டலில் பல பாடசாலைகளில் உலக மனநல தின நிகழ்வுகள் நடைபெற்றதோடு வலயத்தின் பிரதான நிகழ்வு தி/கிண்/அந் நஜாத் ம.வித்தியாலயத்தில் "எல்லோருக்கும் மனநலம், நல்வாழ்வுக்கு முன்னுரிமை" எனும் தொணிப்பொருளில் பின்வரும் அம்சங்களை உள்ளடக்கி நடாத்தப்பட்டது.

மாணவர் உள மேம்பாட்டுக்கான வழிகள்-விழிப்புணர்வு..
ஆலோசனை வழிகாட்டல் அலகு திறப்பு நிகழ்வு..
ஆசிரியர் உளநலமும் மாணவர் மன நலமும்


இந்நிகழ்வில் வலயத்தின் பிரதிக்கல்விப்பணிப்பாளர் M.C.Nasar , கிண்ணியா தள வைத்தியசாலை உளநலப்பிரிவின் வைத்தியர் A.K.M.Nasmy மற்றும் வலயத்தின் ஆலோசனை வழிகாட்டல் பிரிவின் ஆலோசகர்களான A.M.Hithayathullah, S.A.Azeez ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.
ஆலோசனை வழிகாட்டல் பிரிவு,
வலயக்கல்வி அலுவலகம்,
கிண்ணியா.