
பல்கலை கழக நுழைவுத்தகுதி..
13.09.2022. திட்டமிட்டபடி, கிண்ணியா வலயக்கல்வி பணிப்பாளரின் வழகாட்டலுக்கமைவாக வலயத்தின் ஆலோசனை வழிகாட்டல் பிரிவினால் 2021 பல்கலைக்கழக நுழைவுத்தகுதி பெற்ற மாணவர்களுக்கான வழிகாட்டல் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது, அல்ஹம்து லில்லாஹ். 170 மாணவர்கள் கலந்து பயன்பெற்ற இந்நிகழ்வில் துறைவாரியான பல்கலைக்கழக கற்கை நெறிகள். ஆன்லைன் (Online) இல் விண்ணப்பிக்கும் முறை.. உள்ளிட்ட தேவையான வழிகாட்டல்கள் வழங்கப்பட்டன. வலயத்தின் பணிப்பாளர் A.நசூஹர்கான், பிரதிக்கல்விப்பணிப்பாளர் செய்யிட் அஹமட், அதிபர் நசூருத்தீன், CRC முகாமையாளர் J.இம்தியாஸ், விஞ்ஞான உதவிக்கல்விப்பணிப்பாளர் M.நிஜாம்டீன் ஆகியோருடன் தொழில்வழிகாட்டல் ஆலோசகர் A.Azeez, வளவாளர் Y.ராசிக் பரீட் மாணவர்களுக்கான வழிகாட்டல் ஆலோசனைகளை வழங்கினர்.

தேவையான நேரத்தில் சிறப்பாக ஒழுங்கமைத்து நடாத்திய ஆலோசனை வழிகாட்டல்- ஆசிரிய ஆலோசகர் A.M.ஹிதாயதுள்ளாஹ், தொழில் வழிகாட்டல் ஆலோசகர் S.A.அஸீஸ் அவர்களுக்கும் மற்றும் நிகழ்வில் பங்கெடுத்து ஒத்துழைப்பு நல்கிய உயர்தர பாடசாலைகளின் ஆலோசனை வழிகாட்டல் ஆசிரியர்கள் மற்றும் இதற்கு இட வசதி அளித்த கிண்- மத்திய கல்லூரி அதிபருக்கும் விசேடமாக வளவாள ர்களுக்கும் ,உதவிய அனைவருக்கும் வலயம் சார்பில் மனப்பூர்வமான நன்றிகள்.