
உலக மனநல தினம். 2022.10.10
இன்று (10.10.2022) கிண்ணியா கல்வி வலய ஆலோசனை வழிகாட்டல் பிரிவின் வழிகாட்டலில் பல பாடசாலைகளில் உலக மனநல தின நிகழ்வுகள் நடைபெற்றதோடு வலயத்தின் பிரதான நிகழ்வு தி/கிண்/அந் நஜாத் ம.வித்தியாலயத்தில் "எல்லோருக்கும் மனநலம், நல்வாழ்வுக்கு முன்னுரிமை" எனும் தொணிப்பொருளில் பின்வரும் அம்சங்களை உள்ளடக்கி நடாத்தப்பட்டது.

மாணவர் உள மேம்பாட்டுக்கான வழிகள்-விழிப்புணர்வு..
ஆலோசனை வழிகாட்டல் அலகு திறப்பு நிகழ்வு..
ஆசிரியர் உளநலமும் மாணவர் மன நலமும்


இந்நிகழ்வில் வலயத்தின் பிரதிக்கல்விப்பணிப்பாளர் M.C.Nasar , கிண்ணியா தள வைத்தியசாலை உளநலப்பிரிவின் வைத்தியர் A.K.M.Nasmy மற்றும் வலயத்தின் ஆலோசனை வழிகாட்டல் பிரிவின் ஆலோசகர்களான A.M.Hithayathullah, S.A.Azeez ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.
ஆலோசனை வழிகாட்டல் பிரிவு,
வலயக்கல்வி அலுவலகம்,
கிண்ணியா.